தனித்துவமான கதைக்களத்தில் நடித்து பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் நாயகனாக மாறியுள்ள விஜய் ஆண்டனியின் அடுத்த படம் ‘ரத்தம்.’ சி.எஸ். அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. படம் வரும் அக்டோபர் 6-ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.‘தமிழ் படம்’ படத்தின் பிரமாண்ட வெற்றி மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த இயக்குநர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் வித்தியாசமான பொலிடிகல் திரில்லராக இந்த படம் உருவாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி மூன்று மில்லியன் பார்வைகளைத் தாண்டி யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது.
படக்குழு:-
தயாரிப்பு – இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்
எழுத்து, இயக்கம்: சி.எஸ். அமுதன்
ஒளிப்பதிவு – கோபி அமர்நாத்
இசை – கண்ணன் நாராயணன்
படத்தொகுப்பு – TS.சுரேஷ்
கலை இயக்கம் – செந்தில் ராகவன்
சண்டைப் பயிற்சி – திலிப் சுப்ராயன்
பப்ளிசிட்டி டிசைன்: தண்டோரா சந்துரு
டிஜிட்டல் புரோமோஷன்: டிஜிட்டலி