‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வா வரலாம் வா.’ தேனிசைத் தென்றல்’ தேவா இசையமைக்கும் இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லீ முக்கிய கதாபாத்திரத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.
40 குழந்தைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நாயகியாக மஹானா சஞ்சீவி, வில்லனாக ‘மைம்’ கோபி நடித்துள்ளனர். அவர்களோடு சிங்கம்புலி, சரவண சுப்பையா, தீபா, காயத்ரி ரெமா, பயில்வான் ரங்கநாதன், ‘போண்டா’ மணி, மீசை ராஜேந்திரன், கிரேன் மனோகர், திலீபன், பிரபாகரன், யோகிசாமி, ராமசாமி, வடிவேல் பீட்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எஸ்.ஜி.எஸ் கிரியேட்டிவ் மீடியா தயாரிக்கும் இந்த படத்தை எல்.ஜி. ரவிசந்தர் – எஸ்பிஆர் இணைந்து இயக்கியுள்ளனர்.
இந்த படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்’ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை ‘அம்மா டாக்கீஸ்’ ஸ்டுடியோவில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கதாநாயகன் பாலாஜி முருகதாஸ், கதாநாயகி மஹானா சஞ்சீவி, படத்தின் இயக்குநர்கள் எல்.ஜி. ரவிசந்தர் – எஸ்.பி.ஆர்., ஒளிப்பதிவாளர் கார்த்திக் ராஜா, இயக்குநர் சரவண சுப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஃபர்ஸ்ட் லுக்கில் பாலாஜி முருகதாஸுடன் ரெடின் கிங்ஸ்லீ இணைந்திருக்கிறார். பாலாஜி முருகதாஸ் பளீர் வண்ண உடையில் ஸ்டைலான தோற்றத்தில் இருக்கிறார். படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக்’கும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.