‘குட் பேட் அக்லி’ க்கு வசனம் எழுதியவர் இயக்கத்தில் பிரபுதேவா – லட்சுமி மேனன் நடித்த ‘எங் மங் சங்’ கோடை விடுமுறையில் ரிலீஸ்!

பிரபுதேவா – லட்சுமி மேனன் நடித்துள்ள ‘எங் மங் சங்’ கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவிருக்கிறது.

அஜித் நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் குட் பேட் அக்லி’ படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ள அர்ஜுன் எஸ் ஜே இயக்கிய முதல் படம் இது. 

படத்தின் பெரும்பாலான காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டுள்ளது. 17-ம் நூற்றாண்டில் தொடங்கி, 1980 வரை நடக்கும் கதை. அப்போது அங்கு பிரபலமாக இருந்த குங்ஃபூ கலையை, இந்தியாவில் இருந்து செல்லும் மூன்று இளைஞர்கள் அந்த கலையை கற்று, எங் மங் சங் என்ற பெயரோடு தமிழ்நாட்டுக்கு திரும்புகிறார்கள். அங்கு கற்ற கலையை வைத்து இங்கு என்னென்ன செய்தார்கள் என்பதே இந்த படத்தின் திரைக்கதை.

வித்தியாசமான இந்த கதையை நகைச்சுவையோடு உருவாகியுள்ளது. பிரபுதேவாவிற்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்துள்ளார், ஆர்.ஜே.பாலாஜி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் இயக்குனர் தங்கர் பச்சான், சித்ரா லட்சுமணன், கும்கி அஸ்வின், மாரிமுத்து, காளி வெங்கட், முனீஸ் காந்த், பாகுபலி பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர்.

அம்ரிஷ் இசையில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளன.

அதிரடி சண்டை காட்சிகளும் வித்தியாசமான நடனங்களும் கலந்து ஆக்க்ஷன் காதல் கதையாக உருவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here